பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று உலக நாடுகளிடம் கோரியிருக்கிறார்.
இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தானில் நிலை தொடர்பில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளதாவது, உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டை தனிமையாக்குவது ஆபத்தில் முடியும். அந்நாட்டில் பாதிப்படைந்த மக்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்.
மனிதாபிமான சிக்கலை தடுக்க அந்நாட்டு மக்களுக்கு அனைத்து வழிகளிலும் பாகிஸ்தான் அரசு ஆதரவு கொடுக்கும். எங்கள் நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தானிற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு செல்லும் மனிதாபிமான உதவி மையங்களுக்கு உரிய வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும். மேலும் அந்நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் 500 கோடி நிவாரண தொகை வழங்க ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்.