பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சார்க் மாநாட்டை நாங்கள் வெற்றிகரமாக நடத்துவோம் என்று கூறியிருக்கிறார்.
தெற்கு ஆசியாவின் 8 நாடுகள் உருவாக்கிய சார்க் அமைப்பில், இந்தியா, பூடான், நேபாளம், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இடம் பெற்றிருக்கிறது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த சார்க் மாநாடு, கடந்த 2014ஆம் வருடத்திற்கு பின் நடத்தப்படவில்லை.
அதன்பின்பு, கடந்த 2016 ஆம் வருடத்தில் பாகிஸ்தானில் அம்மாநாடு நடைபெற இருந்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீரின் உரி என்னும் பகுதியில், இந்திய ராணுவத்தினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதால் அதனை ரத்து செய்தனர். இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் சார்க் மாநாட்டை நாங்கள் வெற்றிகரமாக நடத்துவோம் என்று கூறியிருக்கிறார்.