Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா அனுப்பிய கோதுமை!”.. தரைவழியே எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அனுமதி.!!

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்திய அரசு அனுப்பிய 50,000 டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல அதிபர் இம்ரான் கான் அனுமதி வழங்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, இந்திய அரசு, அந்நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் 50,000 டன் கோதுமையை லாரியில் அனுப்ப தீர்மானித்தது. ஆனால், அதனை பாகிஸ்தான் வழியே கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், குளிர்காலத்தை எதிர்நோக்கி இருப்பதால், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவிகள் அளிப்பதற்கு ஆதரவு தருவதாக கூறியிருக்கிறார். மேலும், மருத்துவ உதவி பெற இந்தியாவிற்கு சென்ற ஆப்கானிஸ்தான் மக்கள், நாடு திரும்பவும் பாகிஸ்தான் அரசு உதவும் என்று பிரதமர் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.

Categories

Tech |