பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய திட்டமிட்டிருந்தார்.
பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான விவாதம் நாளை நடைபெற உள்ளது. மேலும் தீர்மானத்தின் விவாதத்தை தொடர்ந்து வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இம்ரான்கான் நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் நாட்டு மக்களிடையே இம்ரான் கான் பேசுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அவரை பிரதமர் இல்லத்தில் வைத்து உளவுத்துறை தலைவர் நதீம் அஞ்சும் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி உமர் ஜாவத் பாஜ்வா இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இம்ரான்கான் உளவுத்துறை தலைவர் மற்றும் ராணுவ தளபதி இருவரை சந்தித்த பின்னர் நாட்டு மக்களிடையே உரையாற்ற இருந்த நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்துள்ளார். இம்ரான் காணின் இந்த முடிவு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.