Categories
உலக செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் போர் பதற்றம்…. நாளை ரஷ்யா செல்லும் இம்ரான்கான்…!!!!

உக்ரைன் நாட்டில் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், இரண்டு நாட்கள் பயணமாக ரஷ்ய நாட்டிற்கு செல்கிறார். கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். கடந்த 1999-ஆம் வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அதன்பிறகு, தற்போது தான் பாகிஸ்தான் பிரதமர், ரஷ்ய நாட்டிற்கு செல்லவிருக்கிறார். இந்த பயணத்தில், இம்ரான் கான், விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து இரண்டு நாடுகளின் நலன் குறித்த முக்கிய கருத்துக்கள் பற்றி பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இம்ரான்கான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |