பிரதமர் இம்ரான் கானிற்கு நெருக்கமானவர்கள் நாட்டிலிருந்து வெளியேற தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடியால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி விட்டன. இதனைத் தொடர்ந்து, அவரின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையற்ற தீர்மானத்தை பாராளுமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் பரிந்துரை படி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
மேலும், இம்ரான்கான் இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். எனவே புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை இம்ரான் கான் இடைக்கால பிரதமராக இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரதமர் இம்ரான் கானினுடைய மூன்றாம் மனைவியான புஷ்ரா பீபியின் நெருங்கிய தோழி பராக்கான் தன் செல்வாக்கின் மூலம் அதிகாரிகளின் இட மாற்றத்தையும், உயர் பதவிகளில் பணி தேர்விற்காகவும் பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிக்கு பிறகு, இரு நாட்களுக்கு முன் அவர் துபாய்க்கு தப்பி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் விமானத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதில் அவர் தன் கால்களுக்கு அடியில் சொகுசு பை ஒன்றை வைத்திருக்கிறார். அந்த பை 90,000 ரூபாய் மதிப்புடையது என்று பாகிஸ்தானில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.