கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட பாதுகாப்பு கருதி எந்த அணியும் முன்வரவில்லை.இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் அணியுடன் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றது. ஆனால் அதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே மற்றும் லசித் மலிங்கா உட்பட முன்னணி வீரர்கள் அந்த தொடரில் பங்கேற்கவில்லை.
Test cricket returns to Pakistan after 10 years!
Sri Lanka will play two #WTC21 matches there next month. pic.twitter.com/G8xQgoyQVt
— ICC (@ICC) November 14, 2019
இந்நிலையில் ஒருநாள், டி20 தொடர்களைத் தொடர்ந்து இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத்தொடரில் பங்கேற்பதற்காக மீண்டும் பாகிஸ்தான் செல்லவுள்ளது.
இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பத்தாண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கு முன் 2009ஆம் ஆண்டு இலங்கை அணி தான் பாகிஸ்தான் மண்ணில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. தற்போது பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 11ஆம் தேதி கராச்சியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 19ஆம் தேதி நேஷ்னல் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
After more than 10 years, Test cricket will return to Pakistan in December when Sri Lanka will play their World Test Championship matches in Rawalpindi and Karachi.
🏏 1st Test
📅 11-15 December
🏟 Pindi Cricket Stadium🏏 2nd Test
📅 19-23 December
🏟 National Stadium https://t.co/UejLVK9OPo— Pakistan Cricket (@TheRealPCB) November 14, 2019