பாகிஸ்தான் நாட்டின் வர்த்தக அமைப்பு, பருத்தி இறக்குமதிக்காக இந்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் 1200க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இயற்கை பேரிடரில் மாட்டிக் கொண்ட அந்நாட்டிற்கு பல நாடுகள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளத்தால் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் பருத்தி உற்பத்தியாளர்கள் இழப்பை சந்தித்தார்கள்.
உற்பத்தியில் 25% பருத்தி அழிந்து போனது. மேலும், நாட்டின் ஜவுளி தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் வர்த்தக அமைப்பு, இந்தியாவிடமிருந்து பருத்தி இறக்குமதி செய்ய கோரிக்கை வைத்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி சங்கம், வாகா எல்லை வழியாக இந்திய நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டுகோள் வைத்திருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் சங்க தலைவராக இருக்கும், குர்ரம் முக்தார்,
இந்திய நாட்டிலிந்து 2.5 மில்லியன் பேல்கள் தேவைப்படும் என்று கூறியிருக்கிறார்.