Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் 3 பிரிவுகளாக மாறும்… இம்ரான் கான் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் நாடு மூன்றாக பிரிய கூடிய ஆபத்து இருக்கிறது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஒரு நேர்காணலில், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது என்றார். அதற்கு தகுந்த தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனில் மிகவும் கடுமையான அழிவு ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் ராணுவம் தான் முதலில் பாதிப்படையும் என்றும் நாடு மூன்றாக பிரியக்கூடிய நிலை உண்டாகும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டால், கடந்த 1090-காலகட்டங்களில் உக்ரைனில் நடைபெற்றதை போன்று உலக நாடுகளின் கட்டாயத்தால் பாகிஸ்தானும் தங்களின் அணு ஆயுத பலத்தை இழந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நாட்டின் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி தெரிவித்ததாவது, நாட்டை பிரிப்பது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த நபரும் பேசமாட்டார். இம்ரான் கான் கருத்து, ஒரு உண்மையான பாகிஸ்தானியரின்  கருத்து போல இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |