Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் : சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேரை…. கைது செய்த போலீசார் …!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) மீது  சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேரை  போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் மீது சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விசாகப்பட்டினம்  பனோரமா ஹில்ஸ் பகுதியை சேர்ந்த  அதிரடிப்படை போலீசாரும்,பிஎம் பாலம் காவல் நிலைய போலீசாரும் இணைந்து சூதாட்டம் நடைபெறும் இடத்திற்கு  சென்றுள்ளனர் . அப்போது சூதாட்டம் நடந்த பகுதியை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அத்துடன் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 லேப்டாப் ,2 எல்சிடி டிவி மற்றும் 3 ஸ்மார்ட்போன் ,ஒரு டேப் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து பிஎம் காலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்  ரவிகுமார் கூறும்போது, ” கிளேடியேட்டர்ஸ் – பெஷாவர் அணிகளுக்கு இடையிலான போட்டி மீது  சூதாட்டம் நடந்ததாகவும் ,இந்த சூதாட்டத்தை ஸ்ரீனிவாஸ்  என்பவர் ஒருங்கிணைந்து நடத்தி உள்ளதாகவும் ” அவர் கூறினார்.

Categories

Tech |