பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பைகான 15 வீரர்களை நேற்று அறிவித்தது
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் 23 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, அணிகள் அறிவித்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியும் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் நேற்று உலக கோப்பையில் களமிறங்கும் 15 வீரர்களை தேர்வு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
Pakistan name squad for ICC Men's Cricket World Cup 2019.#WeHaveWeWill
Read more 👇 https://t.co/rTs93eL2eT pic.twitter.com/Ka8fToZMhv— Pakistan Cricket (@TheRealPCB) April 18, 2019
சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அபித் அலி, பாபர் அசாம், பகீம் அஷ்ரப், பஹார் ஜமான், ஹாரிஸ் சோகைல், ஹசன் அலி, இமாத் வாசிம், இமாம் – உல்–ஹக், ஜூனைட் கான், முகமது ஹபீஸ்,முகமது ஹஸ்னைன், , ஷதப்கான், ஷகீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.