பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மார்ச் 4-ம் தேதியும் , ஒருநாள் போட்டி மார்ச் 29-ம் தேதியும், டி20 போட்டி ஏப்ரல் 5-ம் தேதியும் நடைபெற உள்ளது.இந்த நிலையில் இத்தொடருக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.