Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ் தொடர் ….! வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா ….!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 3  உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஷாய் ஹோப், சுழற்பந்து வீச்சாளர் அகேல் ஹொசைன், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் க்ரீவ்ஸ், உதவி பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் மற்றும் அணி மருத்துவர்  அக்ஷய் மான்சிங் ஆகிய 5 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |