Categories
கிரிக்கெட் விளையாட்டு

யு-19 உலகக்கோப்பை: இந்திய பந்துவீச்சில் 172 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிரான யு-19 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பாட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் இன்று நடைபெற்றுவரும் இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்திவருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இப் போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது.

U19 WorldCup: Pakistan fell to 172 all out.

இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் நசிர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹைதர் அலி, முகமது ஹுரைரா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி களத்தில் செட் ஆவதற்குள்ளேயே இந்திய பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஷ்ரா பந்துவீச்சில் முகமது ஹுரைரா நான்கு ரன்களில் பெவிலியன் திரும்பியதால், பாகிஸ்தான் அணி ஒன்பது ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.

pak

ஹைதர் அலியை தொடர்ந்து வந்த ஃபகாத் முனிர், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் டக் அவுட்டானார். இருப்பினும், கேப்டன் ரோஹைல் நசிருடன் ஜோடி சேர்ந்த ஹைதர் அலி சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்த நிலையில், ஹைதர் அலி 56 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய காசிம் அக்ரம் ஒன்பது ரன்களில் ரன் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஆறாவது வரிசையில் களமிறங்கிய முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாட தொடங்கினார்.

U19 WorldCup: Pakistan fell to 172 all out.

15 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்கள் எடுத்த நிலையில், அவர் அதர்வா அங்கோலேக்கர் பந்துவீச்சில் ஸ்கொயர் லெக் திசையில் அடித்த பந்தை, திவ்யான்ஷ் சக்சேனா டைவ் அடித்து சிறப்பாக பிடித்தார். ஆட்டத்தின் திருப்புமுனையாக இந்த விக்கெட் அமைந்தது.

இதைத்தொடர்ந்து வந்த இர்ஃபான்கான் மூன்று ரன்களில், கார்த்திக் தியாகியின் யார்க்கர் பந்தில் க்ளீன் போல்டானார். இதையடுத்து, செட் பேட்ஸ்மேனாக இருந்த கேப்டன் ரோஹைல் நசிரும், சுஷாந்த் மிஷ்ராவின் ஷார்ட் பிட்ச் பந்தில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இறுதியில், பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஷ்ரா மூன்று, கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Categories

Tech |