Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்தியா தக்க பதிலடி …!!

இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீனா தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதட்டத்தை தணிப்பதற்கு இந்திய மற்றும் சீன உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் வீரர்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது எல்லையில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் நவ்காம் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.ஆயுதங்களை கொண்டு இந்திய வீரர்களை தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். ஒரு பக்கம் சீனாவும், மறுபக்கம் பாகிஸ்தானும் இந்திய எல்லையில் சீண்டுவது இந்திய அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |