Categories
தேசிய செய்திகள்

அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… இந்திய வீரர் ஒருவர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரப்பில் இருந்து  அடிக்கடி, அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது.  இத்தாக்குதலுக்கு இந்தியாவும் தனது பதிலடியை கொடுத்து  வருகிறது. இந்நிலையில் இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்துவருகின்றன.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி என்னும் பிரிவில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இன்று தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார் .

Categories

Tech |