Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சர்ச்சையில் சிக்கிய பாக் கிரிக்கெட் வீரர்” பல பெண்களுடன் சாட்டிங்… இணையத்தில் ‘ஸ்க்ரீன் சாட்’ வைரல்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் வாட்ஸ் அப்பில் பல பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்க்ரீன் சாட்  இப்பொழுது இணையத்தில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுவை  பாக். கிரிக்கெட்  ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக்  சில போட்டியில் சிறப்பாக ஆடினார். வங்கதேச அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி சதம் அடித்து ஆறுதல் அளித்தார்.

Image result for Pakistan Cricketer Imam-Ul-Haq Accused Of Multiple Affairs,

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் மருமகனான இவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இமாம் வாட்ஸ் அப்பில் பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்க்ரீன் சாட் (screenshot) இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இமாம் தன்னுடைய தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

Categories

Tech |