இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த அந்த நாளை பாகிஸ்தான் ஆண்டு தோறும் கொண்டாட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பினரால் புல்வாமா பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமான படை வீரர்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் எதிர்பாராதவிதமாக இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் விமான படையினரிடம் மாட்டிக்கொண்டார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 27-ஆம் தேதி அபிநந்தன் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த அந்த நாளை பாகிஸ்தான் ஆண்டுதோறும் ஆப்பரேஷன் ஸ்விப்ட் ரிடார்ட் என்ற பெயரில் கொண்டாட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.