காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரஜோரி மாவட்டத்தில் டெல்டார், பியூக்கிய,சுண்டர்பணி, குரு செக்டார் உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரரான நாயக் கிஷன் லால் உயிர் இழந்தார்.
பின்னர் , இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் இருவர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாரபுரா மாவட்டத்தில் நேற்று முதல் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் தொடங்கிய நிலையில், மேலும் அங்குள்ள உரி செக்டார்க்கு உட்பட்ட ஹாஜிபிர் என்ற இடத்திலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் . இதற்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி கொடுத்து வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தான் படைகள் எல்லைக்கு அப்பாலிருந்து 1500க்கும் அதிகமான இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.