ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியாத புல்வாமா தாக்குதல் சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கோர தாக்குதலில், 40 இந்திய சி.ஆர்.பி.எப் (CRPF) வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின்போது, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரையும், அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.