Categories
தேசிய செய்திகள்

எங்க ஊர் பாகிஸ்தான்… பேர மாத்துங்க… வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள்..!!

பிகார் மாநிலத்தில் பூர்னியா மாவட்டத்திலுள்ள பாகிஸ்தான் கிராம மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அண்டை நாடான பாகிஸ்தான் பெயரைக் கேட்டாலே, பெரும்பாலான இந்திய மக்கள் அதிருப்தியடைகின்றனர். அப்படிப்பட்ட மனநிலையிலிருக்கும் காலத்தில், பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்திலும் பாகிஸ்தான் என்ற பெயர்கொண்ட ஒரு கிராமம் இருக்கிறது. இந்தியா நாட்டில், பாகிஸ்தான் எனும் பெயர் கொண்ட கிராமத்தால், அப்பகுதி மக்கள் மிகவும் எரிச்சலடைகின்றனர். இப்பெயரைக் கண்டு நாங்கள் மிகவும் வருத்தமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Image result for Pakistani villagers in Purnia district in Bihar

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தின் பெயர் காரணமாக நாங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் இந்த கிராமத்திலிருந்து வேறு கிராமத்திற்குச் சென்று பெண் கேட்டாலோ, பெண் கொடுப்பதற்கோ தயங்குகின்றனர்.

Related image

மேலும் இங்கு இதுவரை ஒரு பள்ளியோ மருத்துவமனையோ கட்டப்படவில்லை. சிலரின் கூற்றுப்படி, 1947ஆம் ஆண்டு பிரிவினையின் போது கிழக்கு பாகிஸ்தானிலிருந்து சில அகதிகள் இங்கு வந்து குடியேறினர். அவர்களால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம். எனவே, எங்களது கிராமத்தின் பெயரை பாகிஸ்தான் என்பதிலிருந்து ‘பிர்சா நகர்’ என்று மாற்றுமாறு, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுகிறோம்” என்றனர்.

Categories

Tech |