வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக கோவில் கதவுகளை இந்து சமூகத்தினர் திறந்து விட்டனர்.
பாகிஸ்தான் நாட்டில் பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பருக்கு மற்றும் நிலச்சரிவின் காரணமாக சாலைகளும் பாலங்களும் துண்டிக்கப்பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த கனமழையினால் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த கனமழையின் காரணமாக அந்நாட்டில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றது. அதாவது 1.34 லட்சம் பேர் வயிற்றுப்போக்காலும் 44 ஆயிரம் பேர் மலேரியா நோயாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும் 500 பேர் நாய் கடியாலும் 16 பேர் பாம்பு கடியினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஐநாவின் மக்கள் தொகை நிதி அமைப்பு வெளியிட்ட செய்தியில் 6.5 லட்சம் கர்ப்பிணிகள் அந்நாட்டில் இருப்பதாகவும் அதில் 73000 பேருக்கு இந்த மாதத்தில் குழந்தை பிறக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் நாட்டில் ஜலால் கான் கிராமத்தில் கடும் வெள்ளத்தினால் தனித்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனிதநேயம் அடிப்படையில் வெள்ளத்தினால் பாதித்த மக்களை தங்க வைப்பதற்கு இந்து சமூகத்தினர் கோயில்களை திறந்து விட்டனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளூர் வாசிகள் பாபா மது தாஸ் கோவிலையும் திறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.