இலங்கை காவல்துறையினர் பாகிஸ்தானியர் மூன்று பேரை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக கூறி கைது செய்துள்ளனர்.
இலங்கையில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக கூறி தலைநகர் கொழும்புவில் பாகிஸ்தானியர் 3 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக கூறி கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டதாக கொழும்பு போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் மூன்று பேருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மூலம் முறையீட்டு ஜாமீன் பெற்றுள்ளனர். இருப்பினும் நீதிமன்றம் அந்த மூன்று பேரிடமிருந்து பாஸ்போர்ட்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளது. அதேசமயம் அவர்கள் மூன்று பேரும் விசாரணையில் சவுதி அரேபியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே விமானங்கள் நேரடியாக இயங்காததால் தாங்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கட்டாய தனிமைப்படுத்தலின் காரணமாக இந்திய தூதரகம் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர். பின்னர் தங்கள் செல்போன் மூலம் இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த மூவர் இந்திய தூதரகத்தை புகைப்படங்கள் எடுத்துள்ளதால் இதற்கு பின்னணியில் ஏதேனும் சாதி இருக்கிறதா ? என்று இலங்கை புலனாய்வு அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகிறது.