Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானின் F-16 போர் விமானம்…. சுட்டு வீழ்த்திய ஆதாரத்தை வெளியிட்டது இந்தியா…!!

இந்தியா விமானப் படை பாகிஸ்தான் நாட்டின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதரத்தை வெளியிட்டுள்ளது.

ஜம்மு மாநிலத்தின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட CRPF  வீரர்கள் தற்கொலை படை மூலமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் அதிகாலையில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது. தாக்குதல் நடந்த அன்றே இந்திய எல்லைக்குள் பதிலடி தாக்குதல் கொடுக்க பாகிஸ்தான் விமானப்படையின் F-16 ரக போர்விமானங்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.


இந்நிலையில், இந்திய விமானப் படை பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானம் பயன்படுத்தியதற்கும் , அதனை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்குமான  ஆதாரங்களை வெளியிட்டது. இதுகுறித்து ஏர் வைஸ் மார்சல் ஆர்.ஜி.கே. கபூர், “பாகிஸ்தான் F-16 ரக போர் விமானத்தை பயன்படுத்தியதற்கான ஆதாரமும் அதனை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது. அத்துடன் இதற்கான ரேடார் ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதற்க்கு முன்பு  பாகிஸ்தானின் அனைத்து F-16 ரக போர் விமானங்களும் அதன் விமானப் படை வசம் உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியா எங்கள் நாட்டின் F-16 ரக போர் விமானத்தை சுட்டதாக பொய் சொல்லிவருவதாக தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் இந்திய விமானப் படை பாகிஸ்தான் நாட்டின் F-16 ரக போர் விமானம் தாக்குதலுக்கான ரேடார் ஆதாரத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |