பரபரப்பான சாலையில் விறுவிறுவென்று ஓடிய பறவைகளை வாகன ஓட்டிகள் தங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் கெனால் சாலை அமைந்துள்ளது. இந்த பரபரப்பான சாலையில் இரண்டு நெருப்புக் கோழிகள் விறுவிறுவென்று ஓடியுள்ளன. இதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இருப்பினும் ஒரு சிலரோ அவற்றை விரட்டியடிக்க முயற்சி செய்துள்ளனர். இவைகள் லாகூரின் புறநகர் பகுதியில் இருந்து நகரத்திற்கு தப்பி வந்துள்ளன என்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1452658256548179972
இந்த நிகழ்வானது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வேறு சிலரோ பறவைகள் இரண்டும் பயந்து ஓடுகின்றன என்றும் அதன் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். முக்கியமாக அவ்விரு பறவைகளில் ஒன்று உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் மற்றொரு பிரபல செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அதாவது, ஆண் ஒருவர் நெருப்புக்கோழி ஒன்றின் கழுத்தை சேர்த்து பிடிக்க முயன்றுள்ளதாகவும் அப்போது அதன் காற்றுக்குழல் இறுகி அது மூச்சுத்திணறி இறந்து விட்டது என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த இறந்து போன பறவை சாலையிலிருந்து அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.