Categories
உலக செய்திகள்

தற்கொலை படை தாக்குதல்…. தலிபானின் உயர்மட்ட தலைவர் மரணம்…. உறுதிப்படுத்திய உறுப்பினர் ….!!

கடந்த வருடம் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் தலிபானின் உயர்மட்ட தலைவர் கொலை செய்யப்பட்டதாக அதன் மூத்த உறுப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் ஏராளமான மாகாணங்களை தலிபான் அமைப்பு கைப்பற்றியது. இதனையடுத்து ஈரான் நாட்டில் இருப்பதைப்போல் ஆப்கானிஸ்தானிலும் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் இடைக் கால அரசின் பிரதமராக முகமது ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் தலிபான்களின் உயர்மட்ட தலைவரின் பொறுப்பில் ஹெய்பத் துல்லாஹ் அகுன்ஜதா அறிவிக்கப்பட்டார்.

அதாவது ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா அதிபராக அல்லது பிரதமராக பொறுப்பேற்று அரசியல் மற்றும் மதரீதியான விவரங்களுக்கு தலைவராக இருந்து அதிபருக்கு அப்பார்பட்டு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா பொது வெளியில் தோன்றாததால் அவர் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தானில் அந்நாட்டு படைகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா வீரமரணம் அடைந்ததாக அதன் மூத்த உறுப்பினர் Amir al-Mu’minin Sheikh தெரிவித்துள்ளார். அதன்பின் இணையதளத்தில் பரவிய ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவின் புகைப்படம் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என நியூயார்க் போஸ்ட-ன் Hollie Mc Kay தெரிவித்துள்ளார்.

Categories

Tech |