பாகிஸ்தானில் 7வது சீசன் பி.எஸ்.எல் போட்டியை பக்க சென்ற இளம்பெண்ணை தனியார் பாதுகாவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர்.
பாகிஸ்தானில் சூப்பர் லீக் 7வது சீசன் பி.எஸ்.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டியை காண்பதற்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது அவர் போட்டியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக தனது குடும்பத்தினரை விட்டு விலகி வேறு இடத்திற்கு சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த இரண்டு தனியார் பாதுகாவலர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த காவலர்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி மறைவான இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்தக் காவலர்கள் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதனால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்ட அந்த பெண்ணின் சகோதரனும், தந்தையும் அப்பகுதிக்கு சென்று உள்ளனர். இதற்கிடையில் தனியார் பாதுகாவலர்கள் இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.