Categories
உலக செய்திகள்

நடக்க போவது என்ன….? வலுக்கும் எதிர்ப்பு…. நெருக்கடியில் உள்ள பிரதமர்….!!

ராணுவ புரட்சி பாகிஸ்தானில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான Inter-Services Intelligenceன் புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கும் ராணுவ தளபதியான கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் பதவி விலகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் அங்கு ராணுவப் புரட்சி களமிறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை மீண்டும் பதவியில் அமர்த்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர் விரைவில் வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பிரதமருக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது.

Categories

Tech |