நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர் .
வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேச பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினர் திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து சென்னையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலாலை பாக்கியராஜ் அணியினர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் பாக்கியராஜ், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.