Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பாக்கெட் பாலில் ருசியான சீம்பால்..!!

முன்பு கிராமங்களில் சீம்பால் எளிதாக கிடைக்கும். ஆனால் நாம் இருக்கும் நகரங்களில் பாக்கெட் பால் தான் அதில் எப்படி சீம்பால் செய்யலாம். பாப்போமா..?
தேவையான பொருட்கள்;
முட்டை          – 3
பால்                – ஒரு கப்
சர்க்கரை     – தேவையான அளவு
செய்முறை:
 ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றுங்கள்,  இது கூடவே சர்க்கரையும் போடணும். சர்க்கரை நல்லா கரையும் அளவிற்கு நன்கு கலக்க வேண்டும். சர்க்கரையை பவுடராக பொடியாக்கி கூட கலந்து கொள்ளலாம்.
அல்லது சர்க்கரைக்கு பதிலாக கண்டென்ஸ்ட் மில்க்ம்  கலந்து கொள்ளலாம், சர்க்கரையும், முட்டையும் ஒன்றாக நன்கு கலக்கிய பின்னர், பாலை அதில் ஊற்ற வேண்டும். அதன்பின்னர் அந்த மூன்றையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நெய் தடவி வைத்திருக்கவேண்டும். அதில் நாம் கலந்து வைத்திருக்கும் முட்டை, பால், சர்க்கரை ஆகியவற்றை கலக்கி வைத்திருப்பதை அந்த பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும். பின் நாம் ஒரு சொம்பு அளவிற்கு தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
கொதித்து வரும் பொழுது அதில் நாம் கலந்து வைத்திருக்கும் பாலை அந்த பாத்திரடத்தோடு உள்ளே  வைத்து மூடி வைக்க வேண்டும். பின்  30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை நன்றாக வேக விட வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து குக்கர் மூடியை எடுத்து விட வேண்டும். அந்தப் பால் நன்றாக வெந்து இருக்கும். அதை நாம் வெளியே எடுத்து சாப்பிடலாம், அவ்வளவுதான் சீம்பால் ரெடி.

Categories

Tech |