Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வாங்கி சென்ற பக்கோடா…. பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை….!!

பக்கோடாவில் பல்லி பொறிந்து கிடந்ததால் அதிகாரிகள் கடையின் தின்பண்டங்களை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகில் தெற்கு பஜாரில் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார். இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனைப் பிரித்துப் பார்த்து தட்டில் தட்டிய போது அதில் எண்ணெயில் பொறிந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிலிருந்து யாரும் அதை சாப்பிட வேண்டாம் என தெரிவித்து விட்டார். இதுகுறித்து சென்னை உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்சப் மூலம் அந்த நபர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சென்னை உணவு பாதுகாப்புத் துறையினர் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நெல்லை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசி தீபா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் உணவு பண்டங்கள் பாதுகாப்பற்ற முறையில் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. அதற்கான ஷட்டர்களை சரிசெய்து மூடி வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கப்பட்டிருந்த குலோப்ஜாமுன் உள்ளிட்ட திண்பண்டங்கள் தயாரித்த தேதி காலாவதி தேதி இல்லாமலிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவை அனைத்தையும் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். அதன்பின் பிளாஸ்டிக் டப்பாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பண்டங்களுக்கு தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை அச்சிடுமாறு கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |