Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்ரீத் கொண்டாட்டம்.. விதிமுறைகளை பின்பற்றிய மக்கள்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுக்க கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கேரளா போன்ற பல பகுதிகள், கடற்கரைகள் மற்றும் மசூதிகளில் அதிகமாக மக்கள் கூடி தொழுகை நடத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து குறைந்த அளவிலான மக்கள், பங்கேற்று தொழுகை நடத்தினார்கள்.

மேலும் ஜம்மு-காஷ்மீர், உத்திரபிரதேசம் போன்ற பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை நடத்தினார்கள். பல்வேறு பகுதிகளில் மக்கள் அவர்களது வீடுகளில் இருந்தே தொழுகையை நடத்தி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் வீரர்கள் இனிப்புகளை தங்களுக்குள் பரிமாறி, பக்ரீத் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இதேபோன்று இந்தியா-வங்காளதேசம் எல்லை பகுதிகளிலும் வீரர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

Categories

Tech |