பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை செய்யக்கூடிய சந்தை திறக்கப்பட்டது. இந்நிலையில் ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். மேலும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது.
மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஆடுகளை வாங்கி சென்றனர். இதனையடுத்து ஆடுகள் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டன. இதனையடுத்து ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.