Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு…. யாரும் இப்படி பண்ண கூடாது…. கலெக்டரின் தகவல்….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பொது இடங்களில் வெட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

முஸ்லிம் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை( புதன்கிழமை) கொண்டாடப்பட இருக்கின்றது. இதனால் குர்பானி எனப்படும் வழிபாட்டின்போது ஆடு, மாடு, ஒட்டகம் என்று தங்கள் வசதிக்கு ஏற்ப அவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். இந்த குர்பானி நிகழ்ச்சியில் பொது இடங்களில் ஆடு, மாடு, ஒட்டகத்தை வெட்ட கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை நாளில் பொது இடங்களில் விலங்குகளை வெட்டுவது, கூட்டமாக குர்பானி நடத்துவது, ஒட்டகம், பசுமாடு மற்றும் கன்றுகுட்டிகளை பலியிடுவது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் சிறப்பு தொழுகைக்கும் அனுமதி வழங்கவில்லை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தடைகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் தாசில்தார் தலைமையில், உள்ளாட்சி, காவல்துறை, கால்நடை, பராமரிப்புத்துறை போன்றோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது பொது இடங்களில் விலங்குகளை வெட்டுவது, கூட்டாக குர்பானி நடத்துவது, ஒட்டகம், பசுமாடு, கன்று குட்டிகளை பலியிடுவது போன்றவைகள் நடைபெறாமல் இருப்பதை கண்காணித்து வருகின்றனர். இந்தக் குழுவினை வருவாய்க் கோட்ட அலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |