Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுடன் மீண்டும் உறவை மேம்படுத்த விரும்புகிறோம்!”.. -பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இந்தியா போன்று அமெரிக்க நாட்டுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பிரதமராக நான் பொறுப்பேற்ற வுடன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டேன். எனினும் அது பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் நல்ல உறவை கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதில் அமெரிக்காவிற்கு உறுதுணையாக இருந்ததாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

மேலும் துரதிஷ்டவசமாக தீவிரவாதத்திற்கு எதிரான போர் சமயத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பிரச்சனை உருவானது. அதனை மீண்டும் சரி செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |