திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறக்கபட்டு சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மார்ச் மாதத்திற்கான தரிசன ரூ.300 டிக்கெட் 20ஆம் தேதி 9 மணி அளவில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுவதாக கூறப்படுள்ளன.
திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்காகவும் காலியாக இருக்கும் அறைகளின் விவரங்களை பற்றி வரும் 20ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் தனக்கு தேவைப்படும் அறைகளை குறிப்பிட்ட நாளில் முன்பதிவு செய்துகொள்ளலாம். திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கிடைக்கும் வரை முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.