சின்ன சங்கரன் கோவிலில் ஆடித்தபசை முன்னிட்டு கொடியேற்றும் விழா கோவில் நிர்வாகத்தினரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவிலின் அறங்காவலரான முருக சாமிநாதன், நிர்வாக குழு உறுப்பினர்களான வேலாயுதம், ராஜகோபால், வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து கோவில் நிர்வாக அதிகாரிகள் கொரோனா ஊடரங்கு காரணமாக கொடியேற்றும் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஆடித்தபசின் முக்கிய நிகழ்வுகளான அம்மன் வீதி உலா கோவிலின் வளாகத்தின் உள்ளேயே நடைபெறுவதாகவும், தெப்ப உற்சவ நிகழ்வு ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் சங்கரன்கோவில் திருவிழாவிற்கு கொரோனா ஊடரங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர்.