Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : மீண்டும் ஏமாற்றிய பாபர் அசாம்…. தலையில் கைவைத்த ரசிகர்கள்…. 6 ஓவர் முடிவில் 40/1..!!

ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

2022 ஆசிய கோப்பை  முதல் ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இன்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஹாங்காங் அணி கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தாலும், வெற்றிக்காக அந்த அணி போராடியது. இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்தாலும், ஹாங்காங் 152 ரன்கள் எடுத்து மிரட்டியது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இதில்  டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக  கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஷ்வான் களமிறங்கினர். பொறுமையாக இன்னிங்க்ஸை தொடங்கிய நிலையில் இஷான் கான் வீசிய 3ஆவது ஓவரில் 4ஆவது பந்தில் பாபர் அசாம் பவுண்டரி அடிதார், அதற்கு அடுத்த பந்தை பாபர் அடிக்க அது நேராக பவுலரிடம் சென்று கேட்ச் ஆனது. பாபர் அசாம் 9(8) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் பக்கர் ஜமான் – ரிஷ்வான் ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர்..

தற்போது பாகிஸ்தான் அணி 6 ஓவர் முடிவில் 40/1 ரன்களுடன் ஆடி வருகிறது. ரிஷ்வான் 15 (17) ரன்களுடனும், ஜமான் 14 (11) ரன்களுடனும் ஆடி வருகின்றனர். முன்னதாக இந்திய அணிக்கு எதிராகவும் பாபர் அசாம் 10 ரன்னில் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணியால் பெரிய ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. இஷான் கான் இந்திய அணியின் ரோகித் சர்மா, தோனி ஆகியோரை வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Categories

Tech |