ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 193 ரன்கள் குவித்துள்ளது.
2022 ஆசிய கோப்பை முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் – பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஷ்வான் களமிறங்கினர். பொறுமையாக இன்னிங்க்ஸை தொடங்கிய நிலையில் இஷான் கான் வீசிய 3ஆவது ஓவரில் 4ஆவது பந்தில் பாபர் அசாம் பவுண்டரி அடிதார், அதற்கு அடுத்த பந்தை பாபர் அடிக்க அது நேராக பவுலரிடம் சென்று கேட்ச் ஆனது. பாபர் அசாம் 9(8) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் பக்கர் ஜமான் – ரிஷ்வான் ஜோடி சேர்ந்தனர்..
இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. இருவரும் பொறுப்பாக அடித்து அற்புதமாக ஆடி வந்தனர். முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.. அதேபோல பக்கர் ஜமாமானும் 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்த நிலையில், 17 வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஸ்வான் – குஷ்தில் ஷா இருவரும் இணைந்தனர்.. கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா அதிரடியாக விலாசினார்..
குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரில் 4 சிக்ஸர் ஒரு வைட் பவுண்டரி என மொத்தம் 29 ரன்கள் வந்தது.. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.. முகமது ரிஸ்வான் 57 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 78 ரன்களுடனும், குஷ்தில் ஷா 15 பந்துகளில் 5 சிக்ஸர் உட்பட 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காம்ல் களத்தில் இருந்தனர். தற்போது ஹாங்காங் அணி 3 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களுடன் ஆடி வருகிறது..