Categories
கிரிக்கெட் விளையாட்டு

#PAK VS BAN : பாபர் அசாம் அசத்தல் ஆட்டம் ….! 4-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 300/4….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள்  குவித்துள்ளது .

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4- ம் தேதி தொடங்கியது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .ஆனால் மழை காரணமாக முதல்            3 நாட்கள் போட்டி பாதிக்கப்பட்டது .

இந்நிலையில் 4-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 76 ரன்கள், ரிஸ்வான் 53 ரன்கள் , அசார் அலி 56 ரன்கள் எடுத்தனர். இதன்பிறகு வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது .ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது. இதனால் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

Categories

Tech |