Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PakvsZim : “அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்”…. பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..!!

அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்” என்று பாகிஸ்தானை கலாய்த்துள்ளார் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா..

ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக கருதப்படும் கேப்டன் பாபர் அசாம் (4) மற்றும் முகமது ரிஸ்வான் (14) சொற்பரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதன்பின் வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டதால் பாகிஸ்தான் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. சிறப்பாக ஆடி வந்த சான் மசூத் 44 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். 15. 1 ஓவரில் 94/6 என்று பரிதவித்தது பாகிஸ்தான்.. அப்போது முகமது நவாஸ் – முகமது வசீம் இருவரும் ஜோடி சேர்ந்து  தட்டி தட்டி கொண்டு சென்றனர். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிச்சர்ட் ங்கராவா வீசிய 19 ஆவது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் 3 ரன்கள் கிடைக்க இரண்டாவது பந்தை முகமது வசீம் பவுண்டரி அடித்தார். பின் மூன்றாவது பந்து ரன் ஏதும் வரவில்லை. தொடர்ந்து நான்காவது பந்தில் 1 ரன் கிடைத்தது. இறுதியில் கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது நவாஸ் தூக்கி அடித்து கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார் . இறுதியில் ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது உள்ளே வந்த ஷாஹின் சா அப்ரிடி அடித்து விட்டு 2 ரன்கள் ஓடும்போது ரன் அவுட் ஆனார். 1 ரன் மட்டுமே கிடைத்தது.. பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.. அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளும், பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார்..

இதனால் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஆக இந்த போட்டி அமைந்துவிட்டது. பாகிஸ்தான் அணி  இப்படி தொடர்ந்து 2 போட்டிகளில் (இந்தியா, ஜிம்பாப்வே) தோல்வியடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை கடைசி பந்தில் ஜிம்பாப்வே தோற்கடித்த பிறகு, ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா, “என்ன ஒரு வெற்றி… செவ்ரான்களுக்கு வாழ்த்துக்கள்… அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார். சமூக ஊடகங்களில் ‘ஃபிராட் பாக் மிஸ்டர் பீன்’ ட்ரெண்ட் ஆன பிறகு இந்த ட்வீட் வந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஹராரேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மிஸ்டர் பீன் போல் நடிக்கும் நகைச்சுவை நடிகர் முகமது ஆசிப்பை பாகிஸ்தான் அனுப்பியது. இதனால் தான் இப்படி அனுப்பியுள்ளார் ஜிம்பாப்வே அதிபர். அதாவது சமீப நாட்களாகவே சமூக வலைதளங்களில் புயலை கிளப்பிய போலி மிஸ்டர் பீன் நபரை குறிப்பிட்டு சிம்பாவே அதிபர் பாகிஸ்தானை கிண்டல் செய்துள்ளார்..

 

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களிடம் உண்மையான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது, மேலும் பாகிஸ்தானியர்களான எங்களிடம் மீண்டும் குதிக்கும் வேடிக்கையான பழக்கம் உள்ளது. திரு ஜனாதிபதி: வாழ்த்துக்கள். இன்று உங்கள் அணி நன்றாக விளையாடியது” என்று ட்விட் செய்துள்ளார்.

Categories

Tech |