Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…. வியாபாரியை தாக்கிய தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

பால் வியாபாரியை தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சடையாண்டி என்ற மகன் உள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சடையாண்டியின் தங்கை மகேஷ்வரிக்கும், அவரது கணவர் கட்டிட தொழிலாளியான சுந்தர்ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த மகேஷ்வரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு சடையாண்டி வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் சுந்தர்ராஜ் சடையாண்டி வீட்டிற்கு வந்து மனைவியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து வாக்குவாதம் முற்றியதில் சுந்தர்ராஜ் சடையாண்டியை தாக்கியுள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் சடையாண்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தர்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |