Categories
டெக்னாலஜி பல்சுவை

அட்டகாசமான அம்சங்கள்…. அறிமுகமாகும் ரெட்மி நோட் 9…!!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்ட் ஆன ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வருகின்ற ஜூலை 20 இல் சியோமி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இதற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அறிவுறுத்தும் டீஸரை ரெட்மி பிராண்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.டூயல் சிம், 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 13 எம்பி செல்ஃபி கேமரா, யுஎஸ்பி டைப்-சி,18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இதனை தொடர்ந்து இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் தளத்தில் மிகவும் பெரிய அளவில் விற்பனையாக உள்ளது.

Categories

Tech |