Categories
தேசிய செய்திகள்

வேற லெவல்….! மோசடியில் ஈடுபட்ட வருங்கால கணவர்…. அதிரடியாக கைது செய்த பெண் சப் இன்ஸ்பெக்டர்….!!!

வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி ஈடுபட்ட ராணா போகட்.

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உதவி காவல்துறையினராக பணிபுரிந்து வருபவர் ஜூன்மோனி ரபா. இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக குடும்பத்தினர் இணையதளத்தில் வரன் பார்த்து வந்தனர். இதற்கிடையில் இணையதளம் வழியாக ஜூன்மோனி ரபாவிற்கு ராணா போகட் என்பவர் அறிமுகமாகியுள்ளார். மேலும் தான் அரசு  அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இவரின் இந்த வார்த்தையை நம்பி ஜூன்மோனி ராணாவுடன் பேசி வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திடீரென ஜூன்மோனிக்கு  முகம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  வருங்கால கணவரான ராணாவை பற்றி அவதூறாக பேசியுள்ளார். அதாவது நீங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபர் சரியானவர் இல்லை. நீங்கள் விசாரித்து பார்த்து அவருடைய உண்மையான முகத்தை தெரிந்து கொள்ளுங்கள்  என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜூன்மோனி இது குறித்து ராணாவிடம் விசாரித்துள்ளார். இதற்கு ராணா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் இவர் மீது ஜூன்மோனிக்கு சந்தேகம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து ராணாவை பற்றி அவருக்கு தெரியாமல் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில் ஜூன்மோனிக்கு அதிர்ச்சி அடையும் தகவல் ஒன்று கிடைத்தது. என்னவென்றால் ராணா ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தில் உயர் அதிகாரி என கூறி வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி இவர் மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் ராணாவை பற்றிய முழு ஆதாரங்களையும் திரட்டி வைத்து தான் வருங்கால கணவர் என்று கூட பாராமல்  ஜூன்மோனி ராணாவை அதிரடியாக கைது செய்துள்ளார். இதற்கிடையில் உதவி இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி வருங்கால கணவர் என்று கூட பார்க்காமல் கைது செய்ததை காவல்துறையின் உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |