சர்க்கரை ஆலையின் முன்பாக ஊழியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டபட்டி கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவையை தொடங்கவதற்காக ஆலயம் அலுவலகத்தின் முன்பாக அனைத்து தொழிற்சங்க குழுவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்பின் தொழிலாளர் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில், செயலாளர் கோபி, பொறியாளர்கள் சீனிவாசன் மற்றும் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 4-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு ஆறு மாத காலமாக நிலுவையில் இருக்கும் ஊதியத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.