Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விருப்பம் உள்ளவர்கள் எடுக்கலாம்…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்…. காவல்துறை சூப்பிரண்டு தகவல்….!!

பல குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடப் போவதாக காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து வருகின்ற 11-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் சென்று 100 ரூபாய் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் வாகனங்களை ஏலம் எடுத்த ரசீதே வாகனத்தின் உரிமை ஆவணமாகக் கருதப்படுகிறது. மேலும் இது தொடர்பான விபரங்களை அறிய மதுவிலக்கு அமல்பிரிவு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9498150605, 9498116689 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

Categories

Tech |