Categories
உலக செய்திகள்

‘இந்த பகுதிகளில் காணலாம்’…. பல வருடங்களுக்கு பிறகு…. நிகழும் சந்திர கிரகணம்….!!

மிக நீண்ட நேர சந்திர கிரகணமானது பல ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிக நீண்ட நேர சந்திர கிரகணமானது 580 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இன்று நடக்க இருக்கிறது. இந்த பகுதி நேர சந்திர கிரகணமானது நிறைவடைய 6 மணி நேரம் ஒரு நிமிடம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு  இன்றைய கிரகணம் முழுமையாக நன்றாகத் தெரியும்.

மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் பகல் 1.30 மணிக்கு கிரகணத்தின் உச்சம் ஏற்படும் என்பதால் இதனை காண இயலாது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சந்திரனின் 90% பகுதியை பூமி மறைத்துவிடும். இதன் காரணமாக நிலவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |