‘அரண்மனை 3’ படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு, விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல ”ZEE 5” OTT தளத்தில் இந்த படம் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
https://twitter.com/RaashiiKhanna_/status/1455212558810374148