Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து பாலியல் வன்கொடுமை சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

புதுக்கோட்டையில் மாதுளம் பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது சிறுமி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி மர்மமான முறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிறுமியின் தாய் சூரியகலா மேட்டுபட்டியை  சேர்ந்த கணேசனுடன் தகாத உறவு வைத்திருந்தது தெரியவந்தது. அண்மையில் அவரது வீட்டிற்குச் சென்ற கணேசன் சிறுமிக்கு மாதுளம் பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் அம்பலமானது.

இதையடுத்து கணேசனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து கணேசன் இடமும் சூரியகலா இடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |