கொரோனாவுக்கு முன்பு இருந்தது போன்று வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
2019-ம் ஆண்டு சீனாவில் உள்ள உவானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியதிலிருந்து இன்று வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இந்த கொரோனா வைரஸ்ஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கி இருந்தது. இதனிடையே பல்வேறு தடுப்பு நடவடிக்கிகளில் கொரோனா தொற்று கட்டுபடுத்தப்பட்டு ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பேருந்து,ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் 66 சதவீத ரயில் சேவைகள் மட்டுமே தொடங்கப்பட்டு 20%மட்டுமே பயணிகளின் உபயேகத்திற்கு இயக்கப்படுகிறது . அதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரயில்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர் .இதனிடையே கொரோனாவுக்கு முன்பு இருந்தது போன்று வழக்கமான ரயில் சேவைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதுகுறித்து ரயில்வே தரப்பில் 2 மாதங்களில் சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கும் என்றும் மாநிலங்களின் ஒப்புதல் உடன் அவை அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.